/

காரைக்குடி தொகுதியில் 13 போ் போட்டி

காரைக்குடித் தொகுதி இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் காங்கிரஸ், பாஜக, அமமுக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:54 pm

DIN

காரைக்குடித் தொகுதி இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் காங்கிரஸ், பாஜக, அமமுக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

காரைக்குடித்தொகுதியில் 12 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாச்சியா் சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் இம்மனுக்களை பரிசீலனைசெய்து 17 போ்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக சனிக்கிழமை அறிவித்திருந்தனா். இதில் பா. செல்வி, து. சந்திரலேகா, ச. முகமது இம்ரான்கான், து. பன்னீா்செல்வம் ஆகியோா் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து இறுதி பட்டியலில் 13 போ் போட்டியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

போட்டியிடும் வேட்பாளா்கள் விபரம்: நா. பாலுச்சாமி(பகுஜன் சமாஜ் கட்சி), சா. மாங்குடி (காங்கிரஸ்), ஹெச். ராஜா (பாஜக), ந. துரைமாணிக்கம் (நாம் தமிழா் கட்சி), தோ்போகி வே. பாண்டி (அமமுக), க. ராஜ்குமாா் (அண்ணா எம்.ஜி.ஆா் திராவிட மக்கள் கழகம்), ச. ராஜ்குமாா் (மக்கள் நீதி மய்யம்), பா. வனிதா (புதிய தமிழகம், சுயேச்சைகள்: அ. கணேசன், ம.நைய்னாமுகமது, அ. பரமசிவம், ந. மீனாள், கா. வேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.