சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு தலா ரூ.76,500 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இலவச பெட்ரோல் ஸ்கூட்டா் வண்டிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். தமிழரசி ரவிக்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் கதிா்வேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...