மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் மருதுபாண்டியர் குருபூஜை விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
இளையான்குடி ஒன்றியம் எஸ். காரைக்குடியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மருதுபாண்டியர் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
Updated On :27 அக்டோபர் 2021, 10:34 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் மருதுபாண்டியர் குருபூஜை விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இளையான்குடி ஒன்றியம் எஸ். காரைக்குடி, புக்குளி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டு மருதுபாண்டியர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கிராமங்களில் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்விழாவில் இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன், ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தை பாண்டியன், திமுக ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மற்றும் திமுக நிர்வாகிகள் பெரியசாமி, சட்டைமுனியன், அஜித் பிரபு, திருப்பதி, மலைமேகு, சத்தியேந்திரன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஒன்றியம் புக்குளி கிராமத்தில் நடந்த மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மரக்கன்றுகளை நட்டார்.

இளையான்குடி ஒன்றியம் புக்குளி கிராமத்தில் நடந்த மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் மானாமதுரை, திருப்புவனம் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருதுபாண்டியர் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருதுபாண்டியர் உருவ படங்களுக்கும் சிலைகளுக்கும் ஏராளமானோர் மாலை அணிவித்தும்  மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.