மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரையுடன் ஊராட்சிகளை முழுமையாக இணைக்கக் கூடாது: கருத்துக்கேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்

ஊராட்சி பகுதிகளை முழுமையாக நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துப் பேசினர். 

News image
மானாமதுரையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
Updated On :4 செப்டம்பர் 2021, 9:24 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை முழுமையாக நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துப் பேசினர். 

மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக  பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் நகர் பகுதியுடன் ஒட்டி அமைந்துள்ள  ஊராட்சிகளில் உள்ள சில பகுதிகளை மானாமதுரை நகராட்சி பகுதியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் மானாமதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர்.

மானாமதுரையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர்.

இக்கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், கே.தங்கமணி உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

அப்போது மானாமதுரை நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளை முழுமையாக  தகுதி உயர்த்தப்பட்டுள்ள நகராட்சியுடன் இணைக்கக்கூடாது. நகர் பகுதியுடன் ஒட்டி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை மட்டுமே நகராட்சியுடன் இணைக்க வேண்டும். ஊராட்சிகளை ரத்து செய்து முழுமையாக நகராட்சியுடன் இணைத்தால் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அரசின் பல்வேறு சலுகை உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு மானாமதுரை நகராட்சிக்கு தேவையான பகுதிகள் ஊராட்சி எல்கைகளிலிருந்து எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

இக்கூட்டத்தில் பேரூராட்சித்துறை மண்டல  உதவி இயக்குனர் கணேஷ்ராம், மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, வட்டாட்சியர் தமிழரசன், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.