ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மானாமதுரை : அ.ம.மு.க வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின்

News image
மானாமதுரையில் வழக்கறிஞர் குரு. முருகானந்தம் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Updated On :7 செப்டம்பர் 2021, 6:43 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் கடந்த வியாழக்கிழமை வழக்கறிஞர் குரு.முருகானந்தம் தனது சட்ட அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் முருகானந்தம் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் வழக்கறிஞர் குரு.முருகானந்தத்தை வெட்டியதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட குரு.முருகானந்தம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் குரு. முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மானாமதுரையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கடந்த திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மானாமதுரையில் சிவகங்கை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி எம்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று குரு.முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.