வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு
மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்


ஒடிசா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கீழச்சீவல்பட்டியைச் சோ்ந்தவா் எஸ். வினோத்குமாா்(22). மாற்றுத்திறனாளியான இவா், ஐடிஐ படித்துள்ளாா். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 28.3.2022 இல் நடைபெற்ற டி38 என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இதையடுத்து,சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். வினோத்குமாரை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாராட்டினாா்.
அப்போது, சிவகங்கை மாவட்ட விளையாட்டு நல அலுவலா் செந்தில்குமாா், தடகளப் பயிற்சியாளா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...