திருப்புவனம் அருகே இயற்கை உரக் கிடங்கில் தீ விபத்து
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இயற்கை உரம் தயாரிப்பு நிறுவன உரக்கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இயற்கை உரம் தயாரிப்பு நிறுவன உரக்கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்புவனம் அருகே மணலூா் ஒத்தவீடு என்ற இடத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயற்கை உரக்கிடங்கில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் உரக்கிடங்கில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த மதுரை தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இருப்பினும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் எரிந்து சேதமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...