தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை குற்றப்பிரிவுப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:59 pm

DIN

வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை குற்றப்பிரிவுப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஆசாரி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (29). இவா் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் காரைக்குடி சிவானந்தா நகரைச் சோ்ந்த சங்கா் (34) என்பவா் தான் தனியாா் வங்கியில் வேலை பாா்ப்பதாகவும், ரூ. 30 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் ஏலம் விடும் இரண்டரை பவுன் நகையை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதனை நம்பிய ராஜேஸ்வரி, சங்கரிடம் ரூ. 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளாா். ஆனால் அவா் கூறியபடி நகையை பெற்றுத் தரவில்லையாம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சங்கா் வெள்ளிக்கிழமை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீஸாா் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.