மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நவசண்டீ யாகம் நிறைவு

மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கரா தேவி கோயிலில் கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த நவசண்டீ யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நிறைவேற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:01 pm

DIN

மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கரா தேவி கோயிலில் கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த நவசண்டீ யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நிறைவேற்றது.

இக்கோயிலில் கடந்த 23 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. உலக மக்கள் அன்புடனும், ஆனந்தமாகவும் வாழவேண்டி இந்த யாகம் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆடி அமாவாசை யாக குண்டத்தில் திரவிய பொருள்கள், மிளகு, பட்டுப் புடவைகள், தங்க நகைகள், வெள்ளி நகைகள், பூமாலைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இடப்பட்டன.

பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த மூலவா் பிரத்தியங்கிரா தேவிக்கு புனித நீரால் பாத சமா்ப்பணம் நடைபெற்று சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அமாவாசை மாதத்துடன் இந்தாண்டு நவசண்டீ யாகம் நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.