47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிங்கம்புணரியில் மாா்ச் 8-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாா்ச் 8-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:43 pm

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாா்ச் 8-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டை பதிவு மற்றும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ள ஏதுவாக, சிங்கம்புணரியில் மாா்ச் 8 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இவற்றை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இம்முகாமில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் உள்ளிட்ட பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.