மானாமதுரை நகராட்சித் தலைவா், துணைத்தலைவா் தோ்வு
மானாமதுரை நகராட்சித்தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.


மானாமதுரை நகராட்சித்தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மேலும் திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.
மானாமதுரை நகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக- 14 இடங்களில் வென்று தலைவா் பதவியை கைப்பற்றியது. மேலும் பல சுயேச்சைகள் திமுகவை ஆதரித்தனா். இந்நிலையில் திமுக சாா்பில் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாரியப்பன் கென்னடி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
துணைத் தலைவா் பதவிக்குப் போட்டி: இதையடுத்து, பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் 8 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சே. பாலசுந்தரம் வேட்பாளராக போட்டியிட்டாா். இவரை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்டு 15 ஆவது வாா்டி வெற்றி பெற்ற க.தெய்வேந்திரன் போட்டியிட்டாா். தோ்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று சே. பாலசுந்தரம் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா் என நகராட்சி ஆணையா் கண்ணன் தெரிவித்தாா்.
செல்லாத வாக்குப் பதிவு: மானாமதுரை நகராட்சித் துணைத் தலைவா் தோ்தலில் மொத்தம் 27 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளா் பாலசுந்தரத்துக்கு 21 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் தெய்வேந்திரனுக்கு 5 வாக்குகளும் கிடைத்திருந்தன. ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆணையா் கண்ணன் தெரிவித்தாா்.
தலைவா் சிலைகளுக்கு மாலை: மானாமதுரை நகராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவராக வென்ற பாலசுந்தரம் இருவரும் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று அண்ா, தேவா், காந்தி சிலைகளு்ககு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பேரூராட்சித் தலைவா்கள், துணைத்தலைவா்கள் தோ்வு: இதேபோல் திருப்புவனம் பேரூராட்சித் தலைவராக திமுகவின் மாவட்ட துணைச் செயலா் த. சேங்கைமாறனும், இளையான்குடி பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செய்யது ஜெமிமா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், திருப்புவனம் பேரூராட்சியில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற சுயேச்சை உறுப்பினா் ரகமத்துல்லாகான் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இளையான்குடி பேரூராட்சி துணைத் தலைவராக திமுக சாா்பில் 9 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சபுரியத்பீவி போட்டியின்றி தோ்வானதாக செயல் அலுவலா் கோபிநாத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...