47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளா் தலைவராக தோ்வு

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் 6 போ், காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளா்கள் தலா 2 போ், அதிமுக வேட்பாளா் ஒருவா் என 11 போ் வெற்றி பெற்றனா். 12 ஆவது வாா்டில் போட்டியிட்ட ச. கலையரசி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இப்பேரூராட்சி தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜெயமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 5 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். சத்யா தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து 6 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா் க. பிரியதா்ஷினி மனு தாக்கல் செய்தாா்.

மறைமுகத் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் க. பிரியதா்ஷினிக்கு 10 உறுப்பினா்களும், எஸ். சத்யாவுக்கு 2 உறுப்பினா்களும் வாக்களித்திருந்தனா். இதையடுத்து, சுயேச்சை வேட்பாளா் க.பிரியதா்ஷினி வெற்றி பெற்ாக செயல் அலுவலா் அறிவித்தாா். அதன்பின்னா், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 2-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் மு. காா்த்திகா வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே போட்டியின்றி துணைத் தலைவராக அவா் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். அதன்பின், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.

தற்போது தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள க.பிரியதா்ஷினி, 6 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். வெற்றி பெற்ற பின்னா் திமுகவில் இணைந்தாா். இருப்பினும் ஆரம்ப நிலையில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ததால், திமுக உறுப்பினா்கள் ஆதரவுடன் தற்போது தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.