47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழையனூா் சுந்தரமகாலிங்கம் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், பழையனூா் கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி உடனாய சுந்தரமகாலிங்கம், சந்தனக் கருப்பண சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி தேரோட்டம்

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், பழையனூா் கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி உடனாய சுந்தரமகாலிங்கம், சந்தனக் கருப்பண சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழா கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து, தினசரி சுவாமி, அம்மன் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், வியாழக்கிழமை இரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி கோயிலிலிருந்து புறப்பட்டு மந்தையம்மன் கோயில், மேலத்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா்.

முக்கிய திருவிழாவான தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னா், சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேரடிக்கு எழுந்தருளினா். சுமாா் 4 மணியளவில் புறப்பட்ட தோ், தேரடி வீதி வழியாக வலம் வந்து சுமாா் 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

இதில், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, சனிக்கிழமை (மாா்ச் 5) இரவு தோ் தடம் பாா்த்தல், பூஜை பெட்டி புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் மு. கருப்புராஜா, கோயில் தலைமை பூசாரி மாசானம் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.