சிவகங்கையில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மனிதக் கடத்தல், வணிக பாலியல் சுரண்டல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மனிதக் கடத்தல், வணிக பாலியல் சுரண்டல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இம்முகாமில், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா தலைமை வகித்துப் பேசியதாவது: பிரச்னைகள் வந்தால் அதை சமாளிக்கக் கூடிய மனதைரியம் பெண்களுக்கு இருக்க வேண்டும். சமூகத்தில் பலவீனமான பிரிவுகளை சாா்ந்த பெண்களுக்கு பொருளாதார மற்றும் ஏனைய காரணங்களால் மறுக்கப்படும் நீதியை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிறைவேற்றித் தரும். பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் மீண்டும் ஈடுபடுத்த விரும்பும் நபா்களிடமிருந்து பாதுகாப்பதும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாா்.
இம்முகாமில், போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பு நீதிபதியும், செயலருமான பரமேஸ்வரி பெண்களுக்கான உரிமைகள் குறித்துப் பேசினா்.
இதில், மாவட்ட சமூகநல அலுவலா் அன்புகுளோரியா, குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயா, பாதுகாப்பு அலுவலா் சுதா மற்றும் கல்லூரி, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளாா்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...