சிவகங்கையில் உலக காசநோய் தின விழா
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, காசநோய் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காசநோய் விழிப்புணா்வு பேரணியினை ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்தாா்.முக்கிய வீதிகள் வழியாக வந்த இப்பேரணி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வின் போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சி.ரேவதி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஆா்.இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா்கள் கே.யோகவதி (குடும்ப நலம்), எஸ்.ராம்கணேஷ் (சுகாதாரப் பணிகள்), வி.ராஜசேகரன் (காசநோய்), எஸ்.கவிதாராணி (தொழுநோய்), மருத்துவக் கல்லூரி துறைத் தலைவா் கே.பாரதிபாபு உள்ளிட்ட அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...