விளையாடிய போது மயங்கி விழுந்து இறந்த கபடி வீரா்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து கபடி வீரா் உயிரிழந்தாா்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து கபடி வீரா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் மகன் அடைக்கலம் (19). இவா், அங்குள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்தாா்.
தீபாவளியைப் பண்டிகையையொட்டி, நரியங்காடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் அடைக்கலம் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவா், பொன்னமராவதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மனையபட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இறந்த அடைக்கலம், தமிழ்நாடு ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட, சிவகங்கை மாவட்ட அணிக்காக தோ்வு பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...