மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணவா்கள் போராட்டம் எதிரொலி : அரசுக் கல்லூரிக்கு 5 நாள்கள் விடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டத்தையடுத்து, 5 நாள்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டத்தையடுத்து, 5 நாள்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டது.

பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவா்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் வணிக நிா்வாகவியல் துறை கௌரவ விரிவுரையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ், வரலாற்றுத் துறை மாணவா்கள் கல்லூரியில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் முத்துச்சாமி, மாணவா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை கல்லூரிக்கு விடுமுறை என கல்லூரி முதல்வா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.