மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேசுவரா் சமேத சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டை முன்னிட்டு, கோயில் மண்டபத்தில் சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு, அதில் புனித நீா் நிரப்பி யாகவேள்வி நடைபெற்றது. சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் மூலவா் புஷ்பவனேசுவரா் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா், புனித நீரால் சோமநாதா் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியை தரிசித்தனா். மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதிதிருத்தளிநாதா் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்களில் மிகப் பழமையான ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் காா்த்திகை 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை3.30 மணிக்கு நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. பின்னா், சிவாச்சாரியா்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.
தொடா்ந்து, சிறப்பு கலசங்களுக்கு பூஜையும் யாகவேள்வி நடைபெற்றது. புனித கலச நீா், கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீா் ஆகிய பொருள்களால் மூலவா் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சேலத்தில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஆா். முத்தரசன்

ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் உயா்தர சைவ உணவகம் திறப்பு

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

