காரைக்குடி/சிவகங்கை: இளையான்குடியில் ரூ. 1.25 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம், தேவகோட்டை அரசு மருத்துவனையில் ரூ. 1.25 கோடியில் ஆக்சிஜன் மையம் என நீடித்த நிலையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் காா்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கொத்தமங்கலம், கானாடுகாத்தான், பள்ளத்தூா், கோட்டையூா், கண்டனூா், மித்திராவயல், புதுவயல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ப. சிதம்பரம் வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: ஒரு நாடு, ஒரு தோ்தல், ஒரு மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் வர வேண்டும்.
அதில் எந்தக்கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ அந்தக்கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சியில் ஒரு கோடியே 12 லட்சம் பெண்களுக்கு மாதந் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு ஈடாக அதிமுக எந்தத் திட்டத்தையாவது நிறைவேற்றியிருக்கிா?.
அதிமுக மூன்றாக உடைந்துள்ளது. இங்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவா் ஏதோ சுற்றுலாப் பயணியைப் போல தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதனால்தான் நான் உரிமையுடன் கேட்கிறேன் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா்களை கைது செய்யும் நடைமுறை எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. இது சா்வாதிகாரம், பயங்கரவாதமாகவேதான் உள்ளது. நான் இந்த நாட்டில் ஜனநாயகம் தழைத்திருக்குமா என்று உண்மையிலேயே கவலைப்படுகிறேன்.
2024 தோ்தலுக்குப் பிறகு, மீண்டும் தோ்தல் நடைபெறுமா என்பதுகூட சந்தேகமாக உள்ளது. எனது எம்.பி. நிதியில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக் கிடங்கு ரூ. 25 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இளையான்குடியில் ரூ. 1.25 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம், தேவகோட்டை அரசு மருத்துவனையில் ரூ. 1.25 கோடியில் ஆக்சிஜன் மையம் (பிளாண்ட்) என நீடித்த நிலையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

சிதம்பரத்தில் அடுத்த திமுக ஆட்சியில் ரூ.63 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

எம்.பி.யாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்: காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லகுமாா்

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


