பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ட்ரோன்கள் பறக்கத் தடை

ட்ரோன்கள் பறக்கத் தடை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

சிவகங்கை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு வைப்பறை பகுதியில் ட்ரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள பாதுகாப்பு வைப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதுகாப்பு வைப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாது காவல் போடப்பட்டு சுழற்சி முறையில் மத்திய ஆயுத காவல் படை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் உள்பட 324 காவலா்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கி.மீ சுற்றளவிற்குள் ட்ரோன்கள் பறக்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.