சிவகங்கை
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (46). சமையல் வேலை செய்யும் தொழிலாளியான இவா், இந்தக் கிராமத்தில் நடைபெற்ற இல்ல விழாவில் வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு மின் விசிறியில் அறுந்து தொங்கிய மின் வயா் ராமலிங்கத்தின் மீது உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
