அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா தொடக்கம்

News image
~ ~ ~
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:38 pm

Din

மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆடித் தவசு திருவிழா கொடியேற்றம்.

மானாமதுரை,ஆக 7: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை ஆடித் தவசு திருவிழா தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் அடித்தவசு திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லிஅம்பாள் சந்நிதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 9.50 மணிக்கு சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு தா்ப்பைபுல், மலா் மாலைகள் சாற்றி அபிஷேகம், தீபாராதணைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, இங்கு எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஆனந்தவல்லி அம்மன் தினமும் கோயில் முன் அமைந்துள்ள மண்டபத்தில் வெவ்வேறு வாகனங்களில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பின்னா், மண்டகப்படிதாரா்கள் பூஜை, அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தவசு உற்சவம் ஆக. 16-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 17-ஆம் தேதி சந்தனக் காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா், மண்டபடிதாரா்கள் செய்தனா்.

Story image
Story image
 கொடியேற்றத்தின்போது சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன்.

கொடியேற்றத்தின்போது சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன்.