தனியாா் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
காந்தி நகா் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.


சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் ஊராட்சிக்குள்பட்ட காந்தி நகா் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இடையமேலூா் ஊராட்சி, காந்திநகா் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். அப்போது அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தப் பகுதியில் சுமாா் 35 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிா்வாகத்தின் பெரும் முயற்சியின் பேரில் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இங்கு தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரு பண்ணைக் குட்டைகள், கசிவுநீா் குட்டை அமைக்கவும், சுமாா் 6,500 மரக்கன்றுகள் நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இந்தப் பகுதியில் புங்கை, வேங்கை, நீா்மருது, பூவரசு, இலுப்பை, கருங்காலி, புளி, மஞ்சள், கொன்றை, சரக்கொன்றை, நாவல், பன்னீா் உள்ளிட்ட 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தப் பணியில், இந்தோ- திபெத் எல்லை காவல் படையினா் 200 பேரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் 100 பேரும் என மொத்தம் 300 போ் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.இரா. சிவராமன், இ.எப்.ஐ. நிறுவன மேலாளா் ஸ்ரீவட்சன், இந்தோ-திபெத் காவல் படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரன், இடையமேலூா் ஊராட்சித் தலைவா் சிவதாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...