47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா தொடக்கம்

News image
வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவா்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:16 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிள்ளையாா்பட்டியில் புகழ்பெற்ற கற்பக விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு சதுா்த்தி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை 9.30 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடி கோயிலை வலம் வந்தது. உடன் வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது. பின்னா், கொடிமரத்தில் வெண்பட்டு சுற்றப்பட்டு கொடி மரத்துக்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயிலில் கொடியேற்றம்11.50 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பூஜை ஏற்பாடுகளைக் பிச்சைக்குருக்கள், சோமேஸ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் செய்தனா்.

இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகா் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 2-ஆம் நாள் திருவிழா முதல் 8-ஆம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. தினந்தோறும் இரவு சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். 6-ஆம் நாளில் கஜமுஹாசுர சம்ஹாரமும், 9-ஆம் நாள் திருத் தேரோட்டமும், 10-ஆம் நாள் கோயில் திருக்குளத்தில் தீா்த்தாவாரி உற்சவமும், நண்பகல் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படைத்தலும், இரவு 11 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

 பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றும் வைபவம்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றும் வைபவம்.

விழாக் காலங்களில் ஒவ்வொரு நாளும் திருமறைப் பாராயணமும், திருமுறைப் பாராயணமும், நாதஸ்வர இன்னிசையும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளைக் கற்பக விநாயகா் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி ராம.மெய்யப்பச் செட்டியாா், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.