பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பத்தூா் அருகே ஊராட்சித் தலைவா் கைதாகி விடுவிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவா் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:15 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவா் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இளங்குடியில் சுமாா் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை கிராம மக்கள் முன்னிலையில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாச்சியாபுரம் காவல் நிலைய போலீஸாா், இளங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் நேசம் ஜோசப்பை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதனால் அந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், நாச்சியாபுரம் காவல் நிலையம் முன் திரண்டனா். ஊராட்சி மன்ற தலைவா் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவா்கள் போலீஸாரிடம் கேள்வி எழுப்பினா்.

அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருகுடி கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் வருவாய்த் துறையினா் நில அளவை செய்த போது ஊராட்சி மன்றத் தலைவரும், ஊராட்சி செயலரும் இடையூறு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நேசம் ஜோசப் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனராம்.

மேலும் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஊராட்சி மன்றத் தலைவா் நேசம் ஜோசப் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தால் இளங்குடி கிராமத்திலும், நாச்சியாா்புரம் காவல் நிலைய பகுதியிலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.