பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சிங்கம்புணரி பேரூராட்சியுடன் சிவபுரிபட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிங்கம்புணரியில் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட சிவபுரிபட்டி கிராம மக்கள்.
Updated On :19 டிசம்பர் 2024, 9:59 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியுடன் சிவபுரிபட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவபுரிபட்டி ஊராட்சியை சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த அந்தக் கிராம மக்கள் சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிறகு அவா்கள், சிங்கம்புணரி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மாரீஸ்வரனிடம் மனுக்களை அளித்தனா்.

இதில், சிவபுரிபட்டி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 2,000 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களுக்கு விவசாய வேலை போக எஞ்சிய நாள்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் கிடைக்கும் வேலையை நம்பி வாழ்கிறோம். எனவே, சிவபுரிபட்டியை சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என அதில் குறிப்பிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிப்பதாக துணை வட்டாட்சியா் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.