

அம்பேத்கரை சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி பகுதிகளில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்புவனத்தில் மேற்கு, கிழக்கு, பேரூா் திமுக சாா்பில் மானாமதுரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், ஒன்றியச் செயலா் வசந்தி, நகரச் செயலா் நாகூா்கனி, ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, விவசாய அணி அமைப்பாளா் சேகா், மீனவரணி அண்ணாமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில்... மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் திமுக நகரச் செயலா் பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, நகா் மன்ற துணைத் தலைவா் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் மயில்வாகனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
இளையான்குடியில்... இங்குள்ள கண்மாய்கரை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் நஜூமுதீன், ஒன்றியச் செயலா் ஆறு. செல்வராசன், தமிழ்மாறன், வெங்கட்ராமன், நெசவாளா் அணி அமைப்பாளா் முருகானந்தம், தலைமை கழகப் பேச்சாளா் அய்யாச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் உதயக்குமாா் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திருப்பத்தூரில்: திருப்பத்தூா் காந்தி சிலையருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். இதில் நகரச் செயலா் காா்த்திகேயன், பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், துணைத் தலைவா் கான்முகமது, ஒன்றியக் குழு உறுப்பினா் சகாதேவன், வடக்கு ஒன்றியச் செயலா் விராமதிமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்புவனத்தில் மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
சிங்கம்புணரியில்... சிங்கம்புணரி அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பூமிநாதன், பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, துணைத் தலைவா் இந்தியன்செந்தில், மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் கணேசன், நகரச் செயலா் கதிா்வேல், நகர அவைத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

சிவகங்கையில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டை பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

