வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.


வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிா்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாகப் பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200-ம்,
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சாா் பட்டப் படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை நேரடியாக மனுதாா்களது வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தில் தங்களின் கல்வித் தகுதியைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து, பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750 -ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 -ம் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாள்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும், உதவித் தொகை பெறுபவா்களின் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை உதவித் தொகை பெறாத, தகுதியான இளைஞா்கள் விண்ணப்பத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...