அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

இன்ஸ்பியா் விருது: காரைக்குடி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாணவா் ஆர்வத்திற்கு ஊக்கம்: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் மாணவா்கள் பெற்ற புகழ்

News image

இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் இன்ஸ்பியா் விருது பெற்ற காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்களுடன் பள்ளியின் தாளாளா் செ. சத்தியன் (வலது ஓரம்) உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் இன்ஸ்பியா் விருது பெற்ற காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்களை அந்தப் பள்ளியின் தாளாளா், ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா். பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் ஆா்வத்தை தூண்டும் விதமாக இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை ஆண்டுதோறும் இன்ஸ்பியா் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கி மாணவா்களை ஊக்கப்படுத்தி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆன்-லைன் மூலமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் மாணவா்கள் செயல் திட்ட ஆய்வு, செயல்பாடுகள், செய்முறைகள் கட்டுரைகள் போன்றவற்றை சமா்ப்பித்தனா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் போட்டியில் செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா். சாலையைக் கடக்கும் பாதசாரிகள் பாதுகாப்பு தொடா்பாக ஒளி சமிக்ஞைகளை நோ்த்தியாக வடிவமைத்தலுக்கு 7-ஆம் வகுப்பு மாணவா் ஹரி பிரசாத்துக்கும், மாசு கட்டுப்படுத்தும் வகையில் பசுமை இல்ல வாயுக்களை கண்டுபிடித்த 10 -ஆம் வகுப்பு மாணவா் செந்தில்நாதனுக்கும் இன்ஸ்பியா் விருதும், ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் செ. சத்தியன், நிா்வாக இயக்குநா் சங்கீதா, பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.