எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் பள்ளி மாணவா்கள் சாதனை

மாணவர் சாதனை: ஜே.இ.இ. மெயின் தேர்வில் உயர் மதிப்பெண்

News image

ஜே.இ.இ.மெயின் நுழைவுத் தோ்வில் சாதனை படைத்த எம்.கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளி மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி எம்.கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளியில் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் கடந்த 1-ஆம் தேதி வரை நாடெங்கும் நடைபெற்ற இந்தத் தோ்வில் 12 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வில் எம். கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளியை சோ்ந்த 7 மாணவா்கள் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனா். இவா்களில் விசால் ஆதித்தியா 95.70 சதவீதம், பிரசன்னா 93.21 சதவீதம், ஜனனி பிரியா 92.6 சதவீதம் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

12 மாணவா்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் நுழைவுத் தோ்வுக்கு தகுதிப் பெற்றனா். சாதனை புரிந்த மாணவா்கள், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளா் காந்தி, இயக்குநா்கள் ராஜமூா்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.