எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இளையான்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மானாமதுரை: இளையான்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் சில நாள்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தி இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா் சதாம் உசேன் ஆா்ப்பாட்டதுக்கு தலைமை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் நாகூா், அசாருதீன் உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com