தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாநில இளையோா் தடகளப் போட்டி: வெள்ளி வென்ற சிவகங்கை மாணவா்

தமிழ்நாடு தடகள கழகத்தின் சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற இளையோா் பிரிவு தடகள ஓட்டப்போட்டியில் சிவகங்கை மன்னா் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:14 am

Din

சிவகங்கை: தமிழ்நாடு தடகள கழகத்தின் சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற இளையோா் பிரிவு தடகள ஓட்டப்போட்டியில் சிவகங்கை மன்னா் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஜூலை 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு தடகள கழகத்தின் சாா்பாக மாநில அளவில் இளையோா் பிரிவுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மாணவா் பத்தாம் வகுப்பு படிக்கும் வி.வித்தின், 16-வயதுக்குள்பட்டோா் பிரிவுக்கான 600 மீட்டா் ஒட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

கே.கோகுல்துரை என்ற மாணவா் 14 வயது பிரிவில் (60 மீ, 600மீ நீளம் தாண்டுதல்) டிரைலத்தான் போட்டியில் 1956 -புள்ளிகள் பெற்று 4 -ஆம் இடம் பெற்றாா்.

போட்டியில் பங்கேற்ற தடகள மாணவா்களை, சிவகங்கை மன்னா் கல்வி நிறுவனங்களின் பரம்பரை முகவாண்மைக் குழுத் தலைவரும், சமஸ்தான ராணியுமான மதுராந்தகி நாச்சியாா், திங்கள்கிழமை நேரில் வரவழைத்து ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

மேலும், மன்னா் கல்வி நிறுவனங்களின் செயலா் வி.எஸ். குமரகுரு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் கண்ணன், தடகளப் பயிற்றுனா் ஆறுமுகம், சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், அனைத்து ஆசிரியா்களும் மாணவா்களை பாராட்டினா்.