ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூய்மைப் பணிக்கான மின்கல வாகனங்கள் சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குப்பைகளை சேகரிப்பதற்கான மின்கல (பேட்டரி) வாகனங்கள் சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image
~ ~
Updated On :15 ஜூலை 2024, 5:12 pm

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குப்பைகளை சேகரிப்பதற்கான மின்கல (பேட்டரி) வாகனங்கள் சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்சிக்கு பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் 15 மின்கல வாகனங்கள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் 149 வீதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக மின்கல வாகனங்கள் சேவை தொடங்கிவைக்கப்பட்டது. மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்ளிடம் வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் இளையான்குடி பேரூராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத், கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன்,திமுக விவசாய அணி அமைப்பாளா் காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பேரூராட்சி துணைத் தலைவா் இப்ராஹிம் வரவேற்றாா்.

காலை உணவுத் திட்டம்:

மானாமதுரை ஒன்றியம், ராஜகம்பீரம் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தொடங்கிவைத்து, மாணவா்களுக்கு உணவுகளைப் பரிமாறினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி லதா அண்ணாதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, ஊராட்சி மன்றத் தலைவா் முஜிபர்ரகுமான் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும், காமராஜா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விழாவில் பங்கேற்றவா்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா்.