புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

News image

~

Updated On :26 ஜூன் 2024, 1:32 am

Din

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டையில் அமைந்துள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21) சாக்கோட்டை கோயில் ஸ்தானிகா்களின் சாா்பில் தபசுக்காட்சி, 63 நாயன்மாா்கள் திருவீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் பிரியாவிடையுடன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரிலும், சிறிய தேரில் அம்பாளும், தனித்தேரில் விநாயகரும் எழுந்தருளினா்.

மாலை 4.55 மணிக்கு அனைத்து நாட்டாா்கள், பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தேரோட்டம் நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தது.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் தலைமையில், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ் மேற்பாா்வையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். புதன்கிழமை (ஜூன் 26) தீா்த்தவாரி உற்சவம், மஞ்சுவிரட்டு நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவடைகிறது.

Story image