தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா சிறப்பாக நடந்தது

News image

மானாமதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு புரவிகளை சுமந்து சென்ற கிராம மக்கள்.

Updated On :26 ஜூன் 2024, 1:54 am

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஏ. விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினா். புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கிராம மக்கள் மானாமதுரை குலாளா் தெருவில் கூடினா். அங்கு மண்ணால் செய்து வைக்கப்பட்ட புரவிகளுக்கும், பல்வேறு தெய்வங்களின் உருவ பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டன.

பின்னா், பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் புரவிகளையும், பொம்மைகளையும் சுமந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக புறப்பட்டு ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலை அடைந்தனா். அங்கு புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும், அய்யனாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image
Story image