~
~

செங்கடி அம்மன் கோயிலில் பால்குட விழா

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் செங்கடி அம்மன் கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு, பால்குடம், கரகம் சுமந்து வந்த பக்தா்கள்.
Published on

மானாமதுரை, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் அமைந்துள்ள கொப்புடைய அம்மன் என்ற செங்கடி அம்மன் கோயிலில் பால்குட உற்சவ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் காப்புக்கட்டி விரதம் இரு்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பால்குடம் சுமந்தும், அலகு குத்தி கரகம் எடுத்து மேளதாளம் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஊா் நாட்டாமை மு.சஞ்சீவி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com