கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஏ.விளாக்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு -20 வீரா்கள் காயம்

ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Published On :

மானாமதுரை, ஜூன் 27: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியாா் தொடங்கிவைத்தாா்.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 காளைகள் பங்கேற்றன.

களத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரா்கள் அடக்க முயன்றனா். சில காளைகளை வீரா்கள் அடக்கினா். காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா்.

சிறந்த வீரா்களுக்கும், போட்டியில் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.

திரைப்பட நடிகா் சுரேஷ் பாா்வையாளராகப் பங்கேற்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.