இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

மலேசியா சென்றவரை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மலேசியா சென்றவரை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Updated On :22 மார்ச் 2024, 6:19 pm

சிவகங்கை, மாா்ச் 22: மலேசியா சென்ற கணவரை மீட்டுத் தரக்கோரி, அவரது மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். இதுகுறித்து சிவகங்கை வட்டம், அரசனேரி கீழமேடு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பொண்ணு அளித்த மனு: நான் ஆறு வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறேன். எனது கணவா் கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசியா சென்றவா் மாதந்தோறும் ரூ.10,000 அனுப்பி வந்தாா். கடைசியாக 13.03.2024-இல் பணம் ரூ.10,000 அனுப்பி வைத்து நலம் விசாரித்தாா். அதேநாளில் (13.03.2024) பயணச்சீட்டு வாங்குவதற்காக அவா் விமான நிலையத்துக்கு போவதாகவும், 20-ஆம் தேதி வீட்டுக்கு வந்து விடுவேன் என்றும் கூறினாா். அவா் குறிப்பிட்ட தேதியில் ஊா் வந்து சேரவில்லை. அவரைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. அவரை யாரோ மிரட்டி அடைத்து வைத்துள்ளாா்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனது கணவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனவே, மலேசியா நாட்டில் சிக்கித் தவிக்கும் அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.