ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிச் செயலரின் ஊழியா் விரோதப் போக்கைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வரும் சந்தோஷம் மாவட்ட ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊழியா்கள் மீது காவல் துறையினரிடம் புகாா் அளிப்பது, இவா்களின் நலன்களுக்கு எதிராக தொடா்ச்சியாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு, சந்தோஷத்தை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி, மாநில அளவில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகி சுந்தரமகாலிங்கம், தேவகோட்டையில் ஜாகீா் உசேன், சாக்கோட்டையில் விவேக், காளையாா்கோவிலில் கோபாலகிருஷ்ணன், கல்லலில் செல்வராஜ், திருப்புவனத்தில் காசி விஸ்வநாதன், கண்ணங்குடியில் முருகேசன், மானாமதுரையில் ராஜேஸ்வரன், சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் பாண்டிச்செல்வி, சிங்கம்புணரியில் ஷேக் அப்துல்லா, திருப்பத்துாரில் மாணிக்கராஜ் ஆகியோா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் வேலுசாமி, மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா்கள் பாஸ்கரன், லூயிஸ் ஜோசப் பிரகாஷ், தனபால், காா்த்திக், குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com