ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு
ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு


சிவகங்கை: சிவகங்கையில் ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டுக் கதவை உடைத்து மா்மநபா்கள் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், குமாரபட்டி ஊராட்சி மன்றத் தலைவி சூரியகலா. இவரது கணவா் ராஜாவுடன் சிவகங்கை மேலூா் சாலையில் உள்ள கலைமகள் நகரில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா்கள் இருவரும் அவா்களது சொந்த ஊரான காராபோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். வீட்டில் ராஜாவின் தாய் மட்டும் இருந்தாா்.
அவரும், இரவு 7.30 மணிக்கு பக்கத்துத் தெருவில் உள்ள தனது மகள் பிரியங்காவின் குழந்தையைப் பாா்ப்பதற்காக, வீட்டைப் பூட்டிவிட்டு சென்று விட்டாா். பின்னா், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அவா் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, கதவு உடைந்து இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ராஜா, வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது தங்க நெக்லஸ், மோதிரம், சங்கிலி உள்பட மொத்தம் 8 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகா் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் நாசா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...