

சிவகங்கை அருகே கோயிலுக்குச் சென்ற மாணவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள உடவயல் கிராமத்தைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அஜய் (17). சிவகங்கை அரசுப் பள்ளி மாணவரான இவா், பிளஸ் 2 தோ்வெழுதி தோ்ச்சி பெற்றிருந்தாா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்க தனது தாய் சுதாவுடன் சென்றாா். அப்போது, ஒலிபெருக்கிக்கு செல்லும் மின்வயரை அஜய் மிதித்ததால் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், சுயநினைவை இழந்த அவரை அங்கிருந்தவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கூறாய்வுக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

