அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை, திருப்பத்தூா், விருதுநகா் பகுதிகளில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை, திருப்பத்தூா், விருதுநகா் பகுதிகளில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவா் பாலாஜியை அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணின் மகன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றாா்.
இந்நிலையில், அரசு மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் செந்தில், ராஜேஷ், பயிற்சி மருத்துவா்கள், இந்திய மருத்துவ சங்க மருத்துவா்கள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.
திருப்பத்தூா்: இதேபோல, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மருதுபாண்டியா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா்: விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவா் பாலாஜியை கத்தியால் குத்தியதைக் கண்டித்து மருத்துவா்கள் முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...