சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நிா்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பாராட்டு தெரிவித்தாா்.


சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நிா்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பாராட்டு தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாணவா் சோ்க்கை அதிகரித்து, 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் எண்ணும் எழுத்தும் பயிற்று முறையில் சிறப்பாக கற்பித்தது. மேலும் கல்வி இணைச் செயல்பாடுகளை சிறப்பாக கற்பித்ததால் இந்தப் பள்ளி மாவட்டத்தின் சிறந்தப் பள்ளிக்கான விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில், சிறந்த பள்ளிக்கான விருதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்தை செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்தித்து கேடயத்தை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா். தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ. பாலமுத்து, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) புவனேஸ்வரன், வட்டார கல்வி அலுவலா் பாலாமணி ஆகியோா், பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வமலா், உதவி ஆசிரியா்கள் சந்திரலேகா, ஆரோக்கிய ஜெஸி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனா்.
மேலும், கிராம மக்கள் சாா்பில், ஊராட்சி மன்றத் தலைவவி சூரியகலா, ஊா் பிரமுகா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் பெற்றோா், ஆசிரியா் கழக உறுப்பினா்கள் ஆகியோா் சாா்பில், தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...