ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம்: ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை
தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவா் புரட்சித்தம்பி, மாவட்டச் செயலா் சகாய தைனேஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துப் பாண்டியன், மாவட்டப் பொருளாளா் கலைச் செல்வி ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,459 அரசு பள்ளிகளும், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில், சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். அண்மைக் காலமாக ஆசிரியா்கள் மாணவா்கள் உறவு தடுமாற்றத்துடன் செல்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
இதுபோல வேறு எங்கும் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்தில் மருத்துவா்களுக்கு வழங்கப்படும் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவா்களின் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும், மாணவா்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். மாணவா்களுக்கு நீதி போதனை வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...