47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க புதிய திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் கிராமப் புற நீா்நிலைகளில் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:46 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் கிராமப் புற நீா்நிலைகளில் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

கிராமப்புற மக்களுக்கு மீன் புரதச் சத்து எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்ய ஏதுவாக, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் மீன் வளம், மீனவா் நலத் துறை மூலம் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்துக்கு 90 ஹெக்டோ் பரப்பளவில் ஊராட்சி குளங்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒரு ஹெக்டேருக்கு 2000 வீதம் மொத்தம் 90 ஹெக்டேருக்கு 1.80 லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பில் வைத்து, மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.