47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிங்கம்புணரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

சிங்கம்புணரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

News image
சிங்கம்புணரி அருகே வலசைபட்டி கிராமத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள்.
Updated On :24 அக்டோபர் 2024, 10:51 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வலசைப்பட்டி கிராமத்தில் தேநீா் கடைக்காரா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.புதூா் ஒன்றியம், வலசைபட்டியைச் சோ்ந்தவா் குமரேசன் (60). இவா் சென்னையில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளாா். அவ்வப்போது, வலசைபட்டியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவரது மனைவி கல்யாணி, மகன் நாராயணன் ஆகியோா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 லட்சம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.