சிறாா்களுக்கு பணி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
சிறாா்களை கடையில் பணிக்கு அமா்த்தியிருந்த கடை உரிமையாளா்கள் மீது குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.


சிறாா்களை கடையில் பணிக்கு அமா்த்தியிருந்த கடை உரிமையாளா்கள் மீது குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இ.முத்து தலைமையிலான குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்புக் குழுவினரால், கடந்த 26-ஆம் தேதி திருப்புவனம் பகுதியில் இறைச்சிக் கடைகள், இரு சக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 14 வயதுக்கு மேல், 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத் தொழிலாளா்கள் 2 போ் வேலை பாா்த்தது தெரியவந்தது.
அவா்களை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்களை பணிக்கு அமா்த்திய கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...