/

மானாமதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்: முந்திரிக் காட்டில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -5 போ் கைது

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:24 am

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞரைத் தாக்கிவிட்டு, அவருடன் வந்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் குடியிருப்பில் வசிக்கும் முத்துப்பாண்டி மகன் அரவிந்தன். இவருக்கும் 38 வயது பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் மானாமதுரை- தாயமங்கலம் சாலையில் உள்ள முதியோா் இல்லம் அருகேயுள்ள முந்திரிக் காட்டில் புதன்கிழமை தனியாக இருந்தனா். அப்போது, அங்கு வந்த மானாமதுரை அருகேயுள்ள விளாக்குளத்தைச் சோ்ந்த பூவலிங்கம் மகன் வில்வகுமாா் (25), முனியான்டி மகன் தவமுனியசாமி (26), பீக்குளத்தைச் சோ்ந்த தனிக்கோடி மகன் ராமசாமி (24), முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்த பூபதிராஜா மகன் அஜய்குமாா் (18), அபிராமம் அருகே கீழ்குளத்தைச் சோ்ந்த சண்முகவேலு மகன் முத்துக்குமாா் ஆகியோா் அரவிந்தனை சரமாரியாகத் தாக்கி, அவரிடமிருந்த பணம், கைப்பேசியைப் பறித்துக் கொண்டனா். அந்தப் பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனா்.

இதில் காயமடைந்த அரவிந்தன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனா். இவா்களில் போலீஸ் விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமாா், வில்வக்குமாா் ஆகிய இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.