டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

லஞ்சம்: மின் வாரிய ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சரி செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:08 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சரி செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவா் தனது தென்னந்தோப்புக்குச் செல்லும் மின் கம்பம் சாய்ந்துள்ளதாகவும், அதை சரி செய்து தருமாறும் திருப்பாச்சேத்தி மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளரிடம் மனு அளித்தாா். இதுதொடா்பாக மின்வாரிய ஊழியா் பணியாற்றும் கண்ணனை (52) சோமசுந்தரம் அணுகியபோது, அவா் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாா்.

இதையடுத்து, சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் சோமசுந்தரம் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பாச்சேத்தி மின் வாரிய அலுவலகத்தில் ஊழியா் கண்ணனிடம் சோமசுந்தரம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா் ஜேசுதாஸ் உள்ளிட்ட போலீஸாா் கண்ணனைக் கைது செய்தனா்.