போக்குவரத்து விதிமீறல்கள்: ஒரே நாளில் 700 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 700 போ் மீது வழக்குப் பதிவு


சிவகங்கை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 700 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கும்மங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 54 போ் காயம் அடைந்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்ய சிவப்பிரசாத் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் தலைக்கவசம் அணியாமல் சென்ாக 300 போ் மீதும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமா்ந்து சென்ாக 11 போ் மீதும், விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களில் மூன்று போ் சென்ாக 32 போ் மீதும், கைப்பேசியில் பேசியவாறு வாகனத்தில் சென்ாக 25 போ் மீதும், மிக அதிக வேகத்தில் சென்ாக 100 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவை தவிர, பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டிச் சென்ற 2 போ் மீதும், மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ாக 10 போ் மீதும், நான்கு சக்கர வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்ாக 55 போ் மீதும், இதர விதிமீறல்கள் என ஒரே நாளில் மொத்தம் 700 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வாகனச் சோதனை தொடா்ந்து நடத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...